சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசுகிறார் பிரதமர் நரேந்திர மோடி!
மூன்று நாள் பயணமாக சீனா பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டுச் சென்றார். வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அதிகாரபூர்வமற்ற முறையில் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார்.
இந்தச் சந்திப்பை ஒட்டி வுஹான் (Wuhan) நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பில் பேசப்படும் அம்சங்கள் குறித்து திட்டமிடப்படவில்லை என சீனாவுக்கான இந்தியத் தூதர் (Gautam Bambawale) தெரிவித்துள்ளார். எனினும், சீன – இந்திய உறவில் மேலும் நெருக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இந்தச் சந்திப்பு அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வெள்ளி, சனிக்கிழமைகள் இரண்டு நாட்களும் இந்தச் சந்திப்பு நடைபெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு டோக்லாம் எல்லையில் 73 நாட்கள் நீடித்த பதற்றத்தின் பின்னர் நடைபெறும் இந்த இருநாட்டுத் தலைவர்களின் சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.