மதுரையில் முருங்கைக்கான சிறப்பு ஏற்றுமதி சேவை மையம்…!
மதுரையில் முருங்கைக்கீரை சிறப்பு ஏற்றுமதி சேவை மையம் அமைக்கப்படும்.
இன்று சட்டப்பேரவை கூடியுள்ள நிலையில், தமிழகத்தில் முதல் முறையாக இன்று சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த வேளாண் இ-பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் பேரவையில் தாக்கல் செய்துள்ளார்.
இதில், முருங்கை அதிக அளவில் விளையும் தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, அரியலூர், திருப்பூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகள் முருங்கைக்கான ஏற்றுமதி மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரையில் முருங்கைக்கீரை சிறப்பு ஏற்றுமதி சேவை மையம் அமைத்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்தல், இலைகளை பொடியாக்கும் இயந்திரங்கள் போன்ற கட்டமைப்பு வசதிகள் அமைத்து தர ஒரு கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.