வாக்குறுதியை நிறைவேற்றியதற்காக தமிழக முதலமைச்சரை பாராட்டுகிறேன் – கேஎஸ் அழகிரி

Default Image

முதல் நிதிநிலை அறிக்கையிலேயே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதற்காக தமிழக முதலமைச்சரை பாராட்டிய கேஎஸ் அழகிரி.

இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு அரசின் 2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்த நிதிநிலை அறிக்கை, தேர்தல் நேரத்தில் தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு மேற்கொள்ளும் தீவிரமான முயற்சிகளை வெளிப்படுத்துகிறது.

தமிழகத்தில் 2.63 கோடி இருசக்கர வாகன ஓட்டிகள் பயன்பெறும் வகையில், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ. 3 வரியை குறைத்ததன் மூலம், முதல் நிதிநிலை அறிக்கையிலேயே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதற்காக தமிழக முதலமைச்சரை பாராட்டுகிறேன்.

தமிழக அரசு விரைவில் புதிய கல்வி கொள்கையை அறிவிக்கும் என கூறியதோடு ரூ.32,591 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்வி கற்பிக்கும் முறையில் அடிப்படை மாற்றங்கள் செய்து ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை வளர்க்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது

தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்கிற மகத்தான பயணத்தை மேற்கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர் தளபதி மு.க ஸ்டாலின் அவர்களையும், அவரது நோக்கம் நிறைவேற பெரும் துணையாக இருக்கிற நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களையும் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் பாராட்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்