வசூல் ஆகாத ரூ.28,000 கோடியை வசூலிக்க ‘சமாதான் திட்டம்’ – நிதியமைச்சர் பிடிஆர் அதிரடி அறிவிப்பு..!
வசூல் ஆகாத ரூ.28,000 கோடியை வசூலிக்க ‘சமாதான் திட்டம்’ அறிவிக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை முதல் முறையாக காகிதமில்லாபட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அப்போது,பேசிய அமைச்சர்,”உண்மையிலேயே தேவையான திட்டங்கள் மட்டும்தான் செயல்படுத்தப்படும் என்பதால் இடைக்கால பட்ஜெட்டில் மூலதனச் செலவுகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த ரூ. 43,170.61 கோடி என்பது இப்போது ரூ. 42,180.97ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோல,இடைக்கால பட்ஜெட்டில் 2,18,991.96 கோடி ரூபாய் வரி வருவாயாக குறிப்பிட்டப்பட்டிருந்தது, திருத்தப்பட்ட பட்ஜெட்டில் ரூ. 2,02,495.89 கோடி குறைக்கப்பட்டுள்ளது.
2006 – 2007 ஆம் ஆண்டில் மாநில உள்நாட்டு உற்பத்தி வரி விகிதம் 8.48 சதவீதமாக இருந்தநிலையில், 2020 – 21 ஆம் ஆண்டில் 5.46 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போதுள்ள உள்நாட்டு உற்பத்தியை வைத்து கணக்கிட்டால் ரூ.65,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு மதிப்புக் கூட்டுவரி உள்ளிட்ட பழைய வரிகளில் உள்ள ரூ.28,000 கோடி நிலுவைத்தொகையை வசூலிக்க ‘சமாதான்‘ திட்டம் அறிவிக்கப்படும்”,என்று தெரிவித்தார்.