மதுரை மெட்ரோ ரயில் திட்டம் : மதுரை மக்களின் நீண்ட நாள் கனவு – சு.வெங்கடேசன்

மதுரை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து, மதுரை மாநிலங்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழகத்தில் முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இதில், தமிழகத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. அதன்படி சென்னையில் இரண்டு வழிப்பாதையில் மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது. இதனை தொடர்ந்து இரண்டாவது கட்டமாக சென்னையில் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவைக்கான பணிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் மற்ற மாநகராட்சிகளிலும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள், பட்ஜெட் கூட்டத்தொடரில், கோயம்புத்தூரில் மெட்ரோ ரயில் திட்டத்தை அமைப்பது குறித்து மத்திய அரசுடன் கலந்தாலோசித்து விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை அமைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கைகள் தயார் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
மதுரை மக்களின் நீண்ட நாள் கனவான மதுரை மெட்ரோ இரயில் திட்டத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ள தமிழக முதல்வருக்கு மதுரை மக்களின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். #TNBudget #MaduraiMetro #Metro #Madurai pic.twitter.com/JFMIJLdeY7
— Su Venkatesan MP (@SuVe4Madurai) August 13, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் முதல்… நாக்பூரில் 144 தடை உத்தரவு வரை.!
March 18, 2025
“பிற்படுத்தப்பட்டோருக்கு 42% இடஒதுக்கீடு”- தெலுங்கானா சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்.!
March 18, 2025