மகிழ்ச்சி..மீண்டும் ரூ.100 க்கு கீழ் பெட்ரோல்;விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமல்- நிதித்துறை செயலளார் அறிவிப்பு..!

Default Image

பெட்ரோல் விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக நிதித்துறை செயலளார் கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

தமிழக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஏழை நடுத்தர மக்களின் வலியை உணர்ந்து பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரியில் ரூ. 3 குறைக்க முதல்வர் ஆணையிட்டுள்ளார் என தெரிவித்தார். இதனால்,பெட்ரோல் மீதான வரி குறைப்பால் ஆண்டுக்கு ரூ.1,160 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.எனினும்,பெட்ரோல் வரி குறைப்பு உழைக்கும் நடுத்தர குடும்பங்களுக்கு நிவாரணமாக அமையும் என தெரிவித்தார்.

இந்நிலையில்,பெட்ரோல் மீதான லிட்டருக்கு ரூ.3 விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக நிதித்துறை செயலளார் கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.49 க்கு விற்கப்படும் நிலையில் நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வரவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்