குட்நியூஸ்..மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட கடன் தள்ளுபடி – நிதியமைச்சர் பிடிஆர் அறிவிப்பு..!…
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட கடன்களை தள்ளுபடி செய்யப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில்,தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் காகிதமில்லா பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து பேசினார்.அப்போது,பல முக்கிய அம்சங்கள் அடங்கிய திட்டங்களை அறிவித்தார்.
இந்நிலையில்,கூட்டுறவு சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட ரூ.2756 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அர்வித்தர்.மேலும்,விவசாய நகைக் கடன்களில் தரம்,தூய்மை சரியாக கடைப்பிடிக்கப்படவில்லை. முறைகேடுகளை களைந்து நகைக்கடன் தள்ளுபடி நடவடிக்கையை தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் தெரிவித்தார்.
முன்னதாக ,மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.