2026க்குள் மெட்ரோ 2ஆம் கட்ட பணிகள் முழுமையாக நிறைவடைந்துவிடும் – நிதியமைச்சர்.!

Default Image

கோடம்பாக்கம் – பூந்தமல்லி இடையேயான புறவழி தடத்திற்கான சேவை 2025இல் தொடங்கப்படும்.

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான பட்ஜெட் கூட்ட தொடர் இன்று நடைபெறுகிறது. இதில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அதில், பல்வேறு நலத்திட்டங்களுக்கு அரசு ஒதுக்கியுள்ள நிதி குறித்து அறிவித்து வருகிறார்.

அதில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெறும். அந்த பணிகள் 2026இல் முற்றிலுமாக நிறைவு பெரும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ், கோடம்பாக்கம் – பூந்தமல்லி இடையேயான புறவழி தடத்திற்கான சேவை 2025இல் தொடங்கப்படும். மேலும், தாம்பரம் வழியே விமான நிலையத்திலிருந்து கிளம்பாக்கம் பேரூந்துநிலையம் வரை மெட்ரோ சேவையை நீட்டிக்கும் பணி விரைவில் தொடங்கப்படும்.

மேலும், மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை அமைக்க விரிவான சாத்தியக்கூறுகள் கொண்ட அறிக்கைகள் தயார் செய்யப்படும். மெட்ரோ 2ஆம் கட்ட பணிகள் அனைத்தும் அனைத்தும் 2026-க்குள் நிறைவடையும் என தனது காகிதமில்லா நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்