#TNBudget2021:”காவல்துறைக்கு ரூ.8,930 ஆயிரம் கோடி ஒதுக்கீடு” – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்..!
காவல்துறைக்கு ரூ.8,930 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தற்போது தாக்கல் செய்து வருகிறார். பட்ஜெட் உரையில் பேசிய நிதியமைச்சர் கூறியதாவது:
“தமிழ்நாடு காவல்துறைக்கு ரூ.8,930.29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும்,தமிழக காவல்துறையில் உள்ள 14317 காலியிடங்கள் நிரப்பப்படும்.அதேபோல, தீயணைப்புத்துறைக்கு ரூ.405.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.