#BREAKING: பட்ஜெட் தாக்கல்-அதிமுக வெளிநடப்பு
பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று, ஆட்சி பொறுப்பேற்ற பின், தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கையை கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார்.
நிதியமைச்சர் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையைத் துவக்கினார். இந்நிலையில், அதிமுக உறுப்பினர்கள் பேச அனுமதி கேட்டு அமளியில் ஈடுபட்ட நிலையில் அனுமதி கிடைக்காததால் பட்ஜெட் உரையை புறக்கணித்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
வரும் திங்கள் அன்று பொதுவிவாதம் நடைபெறும் அப்போது பேசலாம் என்று சபாநாயகர் அறிவுறுத்தியும், பட்ஜெட் உரையை புறக்கணித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
அதிமுக எம்.எல்.ஏக்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த நிலையில் தொடர்ந்து நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார்.
.