PM தோனி, CM விஜய் , ஆளப்போகும் மன்னர்கள்: விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்..!

Default Image

PM தோனி, CM விஜய், ஆளப்போகும் மன்னர்கள் என மதுரை விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இயக்குநர் செல்வராகவன், அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.  பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

இன்று நடிகர் விஜய் ‘பீஸ்ட்’ பட ஷூட்டிங்கும், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி  ஒரு விளம்பர பட ஷூட்டிங்கும் ஒரே ஸ்டுடியோவுக்கு சென்ற நிலையில் இருவரும் சந்தித்து கொண்டனர். இந்த சந்திப்பில் இருவரும் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இன்றைக்கு இணையதளம் முழுவதும்  வைரலாகி வருகிறது.

இந்நிலையில், மதுரை வடக்கு மாவட்ட மாநகர இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மதுரையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது . அதில் PM என எழுதப்பட்டு அதன் அருகில் தோனி புகைப்படமும், CM என எழுதப்பட்டு அதன் அருகில் விஜய் புகைப்படமும் உள்ளது. அதற்கு கீழ் “ஆளப்போகும் மன்னர்கள்” என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
kaliyammal tvk
anbumani sekar babu
IND vs PAK
dragon movie box office
kaliyammal seeman
Rain update in TN