பிலிப்பைன்ஸில் கடுமையான நிலநடுக்கம்..!ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவு..!
பிலிப்பைன்ஸில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இது ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியுள்ளது.
இன்று அதிகாலை 1.16 மணிக்கு பிலிப்பைன்ஸ் நாட்டில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டின் தாவோ பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இங்கிருந்து 67 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, மேலும் பூமிக்கு அடியே 69 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இந்த கடுமையான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக அங்கிருக்கும் தவுலத் மாவட்ட மக்கள் சிலர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர், மேலும் இவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர். அதேபோல் இந்த நிலநடுக்கம் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தாத காரணத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.