படப்பிடிப்பு தளத்தில் தல – தளபதி சந்திப்பு.!
சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் நடிகர் விஜய் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இருவரும் சந்துகொண்டுள்ளனர்.
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
இந்த படம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது. படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில், விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் படப்பிடிப்பின் போது சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் நடிகர் விஜய் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இருவரும் சந்துகொண்டுள்ளனர்.
விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படப்பிப்பும் தோனி நடிக்கும் விளம்பர பட படம்பிடிப்பும் இன்று சென்னையில் அருகருகே நடந்தது. அப்போது இருவரும் சந்தித்து கொண்டனர். இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்
சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் நடிகர் விஜய் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இருவரும் சந்துகொண்டுள்ளனர்.#Dhoni | #beastmode | #Vijay pic.twitter.com/Ny7mgSEQa5
— Dinasuvadu Cinema (@CinebarTamil) August 12, 2021