பரப்பன அக்ரஹார சிறை அதிகாரி வீட்டில் சோதனை..!
பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறை முன்னாள் அதிகாரி கிருஷ்ணகுமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.
பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் பல லட்சம் பணம் வாங்கிக்கொண்டு சசிகலாவுக்கு வசதிகள் செய்து கொடுத்ததாக அப்போதைய சிறைதுறை அதிகாரி டி.ஜி.பி. சத்தியநாராயணா மீது டி.ஐ.ஜியாக ரூபா புகார் கூறியிருந்தார். லஞ்ச பணத்தில் அப்போதைய சிறை அதிகாரியாக இருந்த கிருஷ்ணகுமாருக்கும் பங்கு கொடுக்கப்பட்டிருக்கலாம்.
அந்த பணத்தில் கிருஷ்ணகுமார் சொத்துக்கள் வாங்கி இருக்கலாம் என சந்தேகம் எழுந்த நிலையில், அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்கின்றனர்.