#BREAKING: நாளை மறுநாள் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்..!

Default Image

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் வரும் 13 ஆம் தேதி நடைபெறும் என அதிமுக அறிவிப்பு.

அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் 2021-2022ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற இருப்பதையொட்டி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் வருகின்ற 13.08.2021 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகத்தில், ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி K. பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியைக் கடைபிடித்தும், முகக் கவசம் அணிந்தும், இன்னபிற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

13.08.2021 அன்று தலைமை கழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மட்டுமே நடைபெறஉள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என  குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்