இந்தியாவில் போக்குவரத்து நெரிசலால் ஆண்டுக்கு 1.5லட்சம் கோடி ரூபாய் அளவுக்குப் பொருளாதார இழப்பு!

Default Image

இந்தியாவின் 4 பெருநகரங்களில்,போக்குவரத்து நெரிசலால் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்குப் பொருளாதார இழப்பு ஏற்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

பாஸ்டன் கன்சல்ட்டிங் குரூப் என்கிற நிறுவனம் டெல்லி, மும்பை, பெங்களூர், கொல்கத்தா ஆகிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் குறித்து அங்குள்ள பொதுமக்களிடம் ஆய்வு நடத்தியுள்ளது. அதில் இந்த 4 நகரங்களிலும் போக்குவரத்து நெரிசலால் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்குப் பொருளாதார இழப்பு ஏற்படுவதாகக் தெரியவந்துள்ளது. நெருக்கடி நேரங்களான காலை 7மணி முதல் 9 மணி வரையும், மாலை 6மணி முதல் 8 மணி வரையும் குறிப்பிட்ட தொலைவைக் கடக்க மற்ற நேரங்களைக் காட்டிலும் ஒன்றரை மடங்கு நேரம் ஆவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

ரயில், பேருந்து உள்ளிட்ட பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துவதில் மும்பை முதலிடத்திலும் கொல்கத்தா இரண்டாமிடத்திலும் உள்ளன. ஆய்வுக்காகப் பேட்டி கண்டவர்களில் 89விழுக்காட்டினர் அடுத்த ஐந்தாண்டுகளில் ஒரு கார் வாங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்