#BREAKING: மேகதாது அணை – தமிழக அரசு மேல்முறையீடு..!
தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
மேகதாதுவில் அணை கட்டப்படுகிறதா என ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு கலைக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட குழுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் ஜூன் 16ல் கலைத்தது.
இதனால், தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.