ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2.63 லட்சம் இருப்பதாக வெளியான வெள்ளை அறிக்கை…! கடனை செலுத்த காசோலையுடன் சென்ற நபர்…!

Default Image

வெள்ளை அறிக்கையில் வெளியிட்டபடி, தனது குடும்பத்தின் மீதுள்ள கடன்தொகையை வழங்க கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு காசோலையுடன் வந்த நபர்.

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள், நேற்று காலை 11:30 மணியளவில் தலைமை செயலகத்தில் வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். இவர் வெள்ளை அறிக்கையை வெளியிட்டு, இது தொடர்பான விளக்கத்தையும் அளித்துள்ளார்.

இந்நிலையில், இந்த அறிக்கையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2,63,976 கடன் சுமத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த காந்தியவாதியான ரமேஷ் தியாகராஜன் என்பவர், காந்தி வேடம் அணிந்து தனது குடும்பத்தின் மீதுள்ள கடனை செலுத்துவதற்காக காசோலையுடன் நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவத்திற்கு வந்தார்.

ஆனால், கோட்டாட்சியர் கோட்டை குமார், அவரின் காசோலையை வாங்க மறுத்துவிட்டார். இதனையடுத்து அவர் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றார். ஆட்சியரும் அந்த காசோலையை வாங்க மறுத்துவிட்டார்.

இந்நிலையில் இதுகுறித்து அவர் கூறுகையில், ஒவ்வொருவரும் அந்தந்த குடும்பத்திற்கான கடன் தொகையை கட்ட முன்வர வேண்டும். எனது குடுமத்திற்கான கடனாக நிலுவையில் உள்ள பதிவேட்டில் நகலையும் தரவேண்டும். இந்த கடனை செலுத்த முன்வரும் வசதியற்ற குடும்பங்களுக்கு ரூ.15 லட்சம் கடனாக கொடுத்து, குடும்பமாக சேர்ந்து சுயதொழில் செய்து நாட்டின் பொருளாதாரத்தையும், தனி நபருடைய வருமானத்தையும் மேம்படுத்த உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live - 18042025
Shine Tom Chacko
tamilnadu rain
sivakumar about Suriya
TVK Leader Vijay Speech
virender sehwag virat kohli Rajat Patidar
TVK Meeting