#BREAKING : குற்றப்பின்னணி விவரங்களை மறைத்த 8 அரசியல் கட்சிகளுக்கு அபராதம் விதித்த உச்சநீதிமன்றம்..!
நடந்து முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 8 அரசியல் காட்சிகள் தங்களது குற்றப்பின்னணி விவரங்களை மறைத்த 8 அரசியல் கட்சிகளுக்கு அபராதம் விதித்த உச்சநீதிமன்றம்.
கடந்த 2020-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தங்கள் கட்சிகளின் சார்பாக தேர்தலில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள், தங்களது குற்றப்பின்னணியை வெளியிட வேண்டும், உள்ளூர் நாளிதழில் விளம்பரம் செய்திருக்க வேண்டும், அவர்களது அதிகாரபூர்வ இணையதளத்தில் இதுகுறித்து தகவல்கள் வெளியிட்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தேர்தலில் குற்றவாளிகள் போட்டியிடுவதை தவிர்க்க உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், நடந்து முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 8 அரசியல் காட்சிகள் தங்களது குற்றப்பின்னணி விவரங்களை வெளியிடவில்லை. எனவே, பாஜக, காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, லோக் ஜனசக்தி உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதமும், தேசியவாத காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலா ரூ.5 லட்சம் அபராதமும் உச்சநீதிமன்றம் விதித்துள்ளது.