மதுரையில் வீட்டில் வளர்க்கும் நாய் ரோட்டில் அசுத்தம் செய்தால் ரூ.500 அபராதம் – மதுரை மாநகராட்சி
மதுரை மாநகராட்சி பகுதிகளில் வீடுகளில் நாய், மாடு, எருமை, குதிரை வளர்த்தால் ஆண்டுக்கு 10% வரி விதிக்கப்படும்.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் வீடுகளில் நாய், மாடு, எருமை, குதிரை வளர்த்தால் ஆண்டுக்கு 10% வரி விதிக்கப்படும் என்றும், திடக்கழிவுகளை தெருக்களில் கொட்டும் இறைச்சி கடைகளுக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது.
மேலும், தெருவில் வீட்டு நாய் மற்றவர்களை அச்சுறுத்தினாலோ, அசுத்தம் செய்தாலோ ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும், இறைச்சி கடை, பிராணி விற்பனை நிலையத்திற்கு ஆண்டு உரிமம் சதுரடிக்கு ரூ.10 வழங்க வேண்டும் என்றும் மதுரை மாநகராட்சி தெரிவித்துள்ளது.