2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்..? ஐசிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!
ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டைச் சேர்ப்பதற்கான முயற்சிகளை செய்து வருவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 8 ம் தேதி முடிவடைந்தது. இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில், இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு மொத்தம் 7 பதக்கங்களை வென்றனர். இதில் சோப்ரா தங்கம் வென்றார், மீராபாய் சானு மற்றும் ரவி தஹியா வெள்ளி, பிவி சிந்து, பஜ்ரங் புனியா, லவ்லினா மற்றும் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
ஒலிம்பிக்கில் கிரிக்கெட் பார்க்கப்படுமா..?
சில காலமாக ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டையும் சேர்க்க வேண்டும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் அடிக்கடி கூறி வருகின்றனர். இந்நிலையில், அடுத்த ஒலிம்பிக் போட்டி 2024-ல் பிரான்ஸ் தலைநகா் பாரீஸிலும், 2028 ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸிலும் நடைபெறவுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டை சேர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஐசிசி அறிவித்துள்ளது. இதுகுறித்து ஐசிசி தலைவர் கிரேக் பார்கிலே கூறுகையில், தெற்காசியாவில் எங்கள் ரசிகர்கள் 92% இருந்து வருகிறார்கள். அதே நேரத்தில் அமெரிக்காவில் 30 மில்லியன் கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர்.
ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் ஒரு சிறந்த கூடுதலாக இருக்கும். ஆனால், ஒலிம்பிக் போட்டிகளில் பல சிறந்த விளையாட்டுகளும் இணைத்து கொள்ள முயற்சி செய்து வருவதால் கிரிக்கெட்டை சேர்ப்பது எளிதானது அல்ல என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், கிரிக்கெட் எவ்வளவு சிறந்தது என்பதைக் காட்ட வேண்டிய நேரம் இது என்று நாங்கள் கருதுகிறோம் என தெரிவித்தார்.
இதற்கு முன் 1900 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் பங்கேற்றுள்ளது. இதில், இங்கிலாந்து, பிரான்ஸ் மட்டும் விளையாடிது. அடுத்த வருடம் பிர்மிங்கமில் நடைபெறவுள்ள 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் இடம்பெற்றுள்ளது.
இதற்கிடையில் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க தயாராக இருப்பதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறினார். லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் 2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டால் இந்தியாவின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் ஒலிம்பிக்கில் பதக்கங்களுக்காக விளையாடும்.
ICC can confirm its intention to push for cricket’s inclusion in the @Olympics, with the 2028 Games in Los Angeles being the primary target.
More details ????
— ICC (@ICC) August 10, 2021