பிரதமர் நரேந்திர மோடி புதிய முயற்சி!சிறையில் உள்ளவர்களை சட்டமன்றத்திற்கு கொண்டு செல்ல முயற்சி!ராகுல்காந்தி குற்றச்சாட்டு

Default Image

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ,கர்நாடகத்தை கொள்ளையடித்தவர்களை, சிறையிலிருந்து சட்டமன்றத்திற்கு கொண்டுசெல்ல பிரதமர் மோடி முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது எடியூரப்பாவும் ரெட்டி சகோதரர்களும் கர்நாடகத்தை கொள்ளையடித்ததாக, ட்விட்டர் பதிவில் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் அரசு அவர்களை நீதியின் முன் நிறுத்தியது என்றும், ஆனால் மோடியோ அவர்களில் 8 பேரை சிறையிலிருந்து கர்நாடக சட்டமன்றத்திற்கு கொண்டு செல்ல முயற்சிப்பதாகவும் ராகுல்காந்தி கூறியுள்ளார். மே 12ஆம் தேதி நடைபெற உள்ள கர்நாடக சட்டமன்ற தேர்தலில், எடியூரப்பாவும் ரெட்டி சகோதரர்களான கருணாகர ரெட்டி மற்றும் சேமசேகர ரெட்டி ஆகியோரும் பாஜக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்