உள்ளாட்சி தேர்தல் : 2 நாட்கள் ஆலோசனை கூட்டம் நடத்தும் அதிமுக…!
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் தலைமையில், வரும் புதன் மற்றும் வியாழக்கிழமை 9 மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் 9 மாவட்டங்கள் மற்றும் நகர்ப்புறங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் இதுவரை நடத்தப்படாமல் இருக்கிறது. இதனையடுத்து, விடுபட்ட மாவட்டங்களில் வரும் அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து, உள்ளாட்சி தேர்தலுக்கான தீவிர ஏற்பாடுகளில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் தலைமையில், வரும் புதன் மற்றும் வியாழக்கிழமை 9 மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.