வெள்ளை அறிக்கை : அரசு பேருந்து ஒரு கி.மீ ஓடினால் அரசுக்கு ரூ.59.15 நஷ்டம் – தமிழக நிதியமைச்சர்
அரசுப் பேருந்துகள் பயணிக்கும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ59.15 நஷ்டம் ஏற்படுவதாக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள், இன்று காலை 11:30 மணியளவில் தலைமை செயலகத்தில் வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். இவர் வெள்ளை அறிக்கையை வெளியிட்டு, இது தொடர்பான விளக்கத்தையும் அளித்துள்ளார்.
அப்போது, தமிழக அரசுக்கு வருவாயை விட, செலவு அதிகமாக இருப்பதாகவும், அரசுப் பேருந்துகள் பயணிக்கும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ59.15 நஷ்டம் ஏற்படுவதாகவும், மகளிருக்கு இலவச பேருந்து திட்டம் கொண்டு வருவதற்கு முன்பே போக்குவரத்து துறையில் நஷ்டம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், மின்சார வாரியம் மற்றும் அரசு போக்குவரத்து கழகங்களும் சேர்த்து மொத்தம் ரூ.2 லட்சம் கோடி கடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.