ஜீரோ வரியில் ஏழைகள் பயனடையவில்லை.. மாநில வரி வருவாய் வளர்ச்சி 4.4% சரிவு!!

Default Image

ஜீரோ வரியில் ஏழைகள் பயனடையவில்லை என்று வெள்ளை அறிக்கையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்!

ஜீரோ வரியில் ஏழைகள் பயனடையவில்லை, கார்ப்பரேட் நிறுவனம், செல்வந்தர்கள் தான் பயனடைகின்றனர். வரி போடாமல் இருப்பது பணக்காரர்களுக்கு சாதகமானது என தெரிவித்தார். வரியே வசூலிக்காவிடில் எப்படி ஆட்சி நடத்த முடியும்? ஜீரோ வரி என்பது அர்த்தமற்ற நடைமுறையாக உள்ளது என குறிப்பிட்டார்.

சரியான வரியை சரியான நபர்களிடம் வசூலித்து வளர்ச்சி பாதையில் மாநிலத்தை கொண்டு செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். மாநில வரி வருவாய் திமுக ஆட்சியில் 11.4% ஆக உயர்ந்தது. 2011-16ல் அதிமுக ஆட்சியில் 9% ஆக இருந்தது. 2016-21ல் மாநில வரி வருவாய் வளர்ச்சி 4.4% சரிவை சந்தித்துள்ளது.

தமிழக அரசுக்கு வருமானம் மிகவும் சரிந்துவிட்டது. வருமானம் சரிந்துள்ளதை ரிசர்வ் வங்கி, நிதிக்குழு உள்ளிட்ட அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன. இதுபோன்று தமிழகத்தில் மோட்டார் வாகனங்களுக்கான வரி கடந்த 15 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருப்பதால் குறைவாக உள்ளது. பிற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் மோட்டார் வாகன வரி குறைவாக உள்ளது.

மேலும், கடந்த 2014க்கு பிறகு மின்சார கட்டணமும் உயர்த்தப்படாமல் இருக்கிறது.  போக்குவரத்துத்துறை, மின்சாரத்துறை, மின்சார பகிர்மான கழகத்தால் மட்டும் அரசாங்கத்தில் 2 லட்சம் கோடி கடன். போக்குவரத்துத் துறையில் பேருந்துகள் இயக்கப்படும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 59 ரூபாய் இயக்குவதற்கான செலவில் நஷ்டம் ஏற்பட்டு கொண்டிருக்கிறது என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்