சற்று நேரத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல்… முதல்வருடன் நிதியமைச்சர் ஆலோசனை!!
வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், முதலமைச்சருடன், நிதித்துறை அமைச்சர் பி டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை.
தமிழக அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 11.30 வெளியிடுகிறார். இந்த நிலையில், இன்னும் சற்று நேரத்தில் தமிழக நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், முதலமைச்சர் முக ஸ்டாலினுடன், நிதித்துறை அமைச்சர் பி டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இதனிடையே, இன்று நிதித்துறை அமைச்சர் வெளியிடப்படவுள்ள தமிழகத்தின் நிதி நிலைக்கான வெள்ளை அறிக்கையில் வரவு – செலவு கணக்குகள், கடன் அளவு, நிதி இருப்பு உள்ளிட்ட அனைத்தும் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.