45 ஆண்டு கால நண்பர்…! நான் நெருங்கிப் பணியாற்றிய தோழர்…! ராமமூர்த்தி மறைவுக்கு ப.சிதம்பரம் இரங்கல்…!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி அவர்கள் மறைவுக்கு ப.சிதம்பரம் இரங்கல்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் னு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அருமை நண்பர் திண்டிவனம் இராமமூர்த்தி அவர்கள் மறைந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிக அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். 45 ஆண்டு கால நண்பர், நான் நெருங்கிப் பணியாற்றிய தோழர். காங்கிரஸின் அடிப்படைக் கொள்கைகளில் உறுதியான நம்பிக்கை கொண்டவர். அவருடைய குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
அவருடைய குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்- ப சிதம்பரம்
— P. Chidambaram (@PChidambaram_IN) August 9, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025