#BREAKING: அதிமுக ஆட்சியில் நிதிநிலை சீர்கேடு என்பது தவறான தகவல்- எடப்பாடி பழனிச்சாமி பேட்டி ..!
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு புதியதாக என்ன திட்டங்கள் துவங்கியுள்ளனர் என எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலம் கொங்கணாபுரம் தூய்மைப் பணியாளர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஆட்சியில் நிதிநிலை சீர்கேடு என்பது தவறான தகவல். 2011-ல் அதிமுக ஆட்சி பொறுப்பு ஏற்கும் போதும் கடன் சுமை இருந்தது. மின்சாதனப் பொருள்கள் உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்த போதும் மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை.
ஏற்கனவே அதிமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களுக்கு தற்போது அடிக்கல் நாட்டுகிறார்கள். அதிமுக ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்கள் தற்போது தொடங்கி வைக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு புதியதாக என்ன திட்டங்கள் துவங்கியுள்ளனர். திமுக அரசு பட்ஜெட் தாக்கல் செய்த பிறகுதான் அவர்களின் செயல்பாடுகளை மதிப்பிட முடியும். திமுக ஆட்சிக்கு வந்த 100 நாள்களில் மக்களின் குறைகள் தீர்க்கப்படும் என்று கூறியது என்ன ஆனது..? பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது என எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.
அதிமுக ஆட்சியில் இருந்த கடன்கள் திமுக ஆட்சியில் இருந்தவைதான். ராஜேந்திரபாலாஜி பாஜகவில் இணையமாட்டார். கூட்டணி கட்சித் தலைவரை போய் பார்த்தால் அவர் அந்த கட்சியில் இணையப்போகிறார் என்று அர்த்தமில்லை.