உள்ளாட்சி தேர்தலில் 100 % வெற்றி – முதல்வர் முக ஸ்டாலின் அறிவுறுத்தல்!
உள்ளாட்சி தேர்தலில் 100க்கு 100% வெற்றி பெற வேண்டும் என திமுக மாவட்ட செயலாளர்களுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவுறுத்தல்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட 9 மாவட்ட திமுக செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அப்போது, 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் திமுக 100க்கு 100% வெற்றி பெற திமுகவினர் பாடுபட வேண்டும் என்றும் மக்களுடைய நமக்கு இருக்கும் நல்ல பெயரை பயன்படுத்தி உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் எனவும் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு வரும் செப். 15குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டியிருந்தது. மேலும், தேர்தல் நடத்துவதற்க்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.