இந்திய மருத்துவ அறிஞர் உலிமிரி இராமலிங்கசுவாமி பிறந்த தினம் இன்று!

Default Image

இந்திய மருத்துவ அறிஞர் உலிமிரி இராமலிங்கசுவாமி பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

ஆகஸ்ட் 8-ஆம் தேதி 1921 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் பிறந்தவர் தான் உலிமிரி இராமலிங்கசுவாமி. இவர் புதுடெல்லியில் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் இயக்குனராகவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் இவருக்கு 1969 ஆம் ஆண்டு இந்திய அரசு பத்மஸ்ரீ விருதையும், அதன்பின் பத்மபூஷன், பத்மவிபூஷன் ஆகிய விருதுகளையும் வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது.

ஊட்டச்சத்தை ஆராய்ச்சி செய்தவர்களில் முன்னோடியாக திகழ்ந்த இவர், சிறப்பான ஆய்வுகள் மேற்கொண்டதன் காரணமாக அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தேசிய அறிவியல் கழகம், இலண்டன் அரச கழக அமைப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்தியாவின் சிறந்த மருத்துவ அறிஞராக விளங்கிய இராமலிங்க சுவாமி அவர்கள் 2001 ஆம் ஆண்டு மே 28-ஆம் தேதி மறைந்துள்ளார். இவரது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்