மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம்..!

Default Image

மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் நேற்று மாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இம்மாநிலத்தில் உள்ள பிஷ்ணுபூர் என்ற பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் இப்பகுதியிலிருந்து 93 கிலோமீட்டர் தொலைவில் 28 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருந்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்