யுபிஎஸ்சி முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு…!

UPSC தேர்வு முடிவுகள் யுபிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஜூலை 18 அன்று யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் முதன்மை தேர்வுகள் நாடு முழுவதும் நடத்தப்பட்டது. தற்பொழுது இந்த தேர்வு முடிவுகள் யுபிஎஸ்சி அதிகாரபூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் யுபிஎஸ்சி அதிகாரபூர்வ தளமாகிய upsc.gov.in மூலம் முடிவுகளை பார்க்கலாம்.
இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 2021 நவம்பர் 21 -இல் நடைபெறக்கூடிய பொறியியல் முதன்மை தேர்வில் பங்கேற்க வேண்டும் என இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், இதன் மூலம், இந்திய கடற்படை, இந்திய திறன் மேம்பாட்டு சேவை, மத்திய பொறியியல் சேவை, மத்திய மின் பொறியியல் சேவை, இந்திய வானொலி ஒழுங்குமுறை சேவை ஆகியவற்றில் 215 காலியிடங்கள் நிரப்பப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
April 6, 2025
திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?
April 6, 2025
வேட்டி சட்டையில் என்ட்ரி.! பாம்பனில் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
April 6, 2025
நடிகர் ஸ்ரீதர் மறைவு: சினிமா பிரபலங்கள் அஞ்சலி.!
April 6, 2025