இந்திய பங்குச்சந்தை 215 புள்ளிகள் சரிவு… 54,300 கீழ் வர்த்தகம்.!
தொடக்கத்தில் ஏற்றத்தில் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை 215 புள்ளிகள் குறைந்து, 54,287.53 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்படுகிறது.
நாளை தொடங்கவிருக்கும் மத்திய வங்கியின் கூட்டத்தில் பங்குச்சந்தைக்கு சாதகமான அறிவிப்புகள் வரலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வரும் நிலையில், இந்திய சந்தைகள் இன்றும் ஏற்றத்தில் காணப்படுகிறது. அதன்படி, இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 245.86 புள்ளிகள் அதிகரித்து, 54,615.63 புள்ளிகளாகவும், நிஃப்டி 31.70 புள்ளிகள் அதிகரித்து, 16,290.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதனிடையே, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் சரிவில் காணப்படுகின்றன. பிஎஸ்இ ஸ்மால் கேப்ஸ், பிஎஸ்இ மெட்டல்ஸ் 1%, பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள் உள்ளிட்ட குறியீடுகள் 1% கீழாகவும், மற்றவை சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீட்டில் உள்ள ஈச்சர் மோட்டார்ஸ், பார்தி ஏர்டெல், ஹெச்.சி.எல் டெக், விப்ரோ, டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், எஸ்பிஐ, ஐஓசி, ஓ.என்.ஜி.சி, உள்ளிட்ட பங்குகள் டாப் சரிவில் உள்ளன. சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பார்தி ஏர்டெல், ஹெச்.சி.எல் டெக், டெக் மகேந்திரா, கோடக் மகேந்திரா, டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், எஸ்பிஐ, டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் சரிவில் உள்ளன.
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பானது பெரியளவில் மாற்றமின்றி, 74.18 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது முந்தைய அமர்வில் 74.16 ரூபாயாக முடிவடைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது, இந்திய பங்குச்சந்தை நிலவரப்படி, சென்செக்ஸ் 215.12 புள்ளிகள் குறைந்து, 54,277.72 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்படுகிறது. நிஃப்டி 21.40 புள்ளிகள் குறைந்து, 16,237.40 புள்ளிகளாக காணப்படுகிறது.