தமிழில் அர்ச்சனை செய்வதற்கு ஆட்சேபனை இல்லை – எச்.ராஜா..!

Default Image

அர்ச்சனை என்பது மதம் சம்மந்தப்பட்ட விஷயம் என்றும், இதில் அரசு தலையிட கூடாது என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இந்து கோயில்களில் சமஸ்கிருத மொழியில் அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சில கோயில்களில் மட்டும் தமிழ் மொழியில் அர்ச்சனை நடைபெறுகிறது. இதனால், தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதாக பல தமிழ் அமைப்புகள் கூறி வந்தன. இதற்கிடையில், திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழில் அர்ச்சனை திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்னை தமிழ் அர்ச்சனை திட்டத்தின் அறிவிப்பு பலகையை வெளியிட்டார். இதனால், நேற்று சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்.

அதன்படி இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள 47 திருக்கோயில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யப்பட உள்ளது. இந்நிலையில், அர்ச்சனை என்பது மதம் சம்மந்தப்பட்ட விஷயம் என்றும், இதில் அரசு தலையிட கூடாது, தமிழில் அர்ச்சனை செய்வதற்கு ஆட்சேபனை இல்லை, இறைவனை எந்த மொழியிலும் வழிபடலாம் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்