டோக்கியோ ஒலிம்பிக்: மகளிருக்கான கோல்ஃப் போட்டியில் இந்தியாவின் அதிதி அசோக் பதக்கம் வெல்ல வாய்ப்பு…!
டோக்கியோ ஒலிம்பிக் மகளிருக்கான கோல்ஃப் போட்டியில் இந்திய வீராங்கனை அதிதி அசோக் பதக்கம் வெல்ல வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஜூலை 23 ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவானது சிறப்பாக தொடங்கிய நிலையில், தற்போது வரை பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
பதக்கங்கள் பெற்ற இந்தியா:
அதன்படி,முன்னதாக நடைபெற்ற மகளிர் பளுதூக்குதல் போட்டியில் மீராபாய் சானு,வெள்ளிப்பதக்கம் பெற்றார்.அவரைத் தொடர்ந்து மகளிர் பேட்மிண்டனில் பிவி சிந்து வெண்கலப்பதக்கமும்,41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஆடவர் அணி ஹாக்கி போட்டியில் முதல் வெண்கலப் பதக்கத்தையும் வென்று சாதனை படைத்தது.மேலும்,குத்துச்சண்டையில் லவ்லினா வெண்கலம் வென்றார்.ஆடவர் மல்யுத்தம் போட்டியில் ரவிக் குமார் பெற்றார்.இதனால்,இந்தியா 2 வெள்ளிப்பதக்கமும்,3 வெண்கலப்பதக்கமும் பெற்றுள்ளது.
கவனம் ஈர்ப்பு:
இந்நிலையில்,ஒலிம்பிக்கில் கோல்ஃப் விளையாட்டின்மீது பெரிதாக யாரும் கவனம் செலுத்தாத நிலையில்,தற்போது அதிதி அசோக் அனைவரின் கவனத்தையும் கோல்ஃப் விளையாட்டின் மீது ஈர்க்க செய்துள்ளார்.
பதக்க வாய்ப்பு:
ஏனெனில்,ஒலிம்பிக் போட்டிகளில் பல வருடங்களுக்கு பின் மீண்டும் கோல்ஃப் ஆடப்படுகிறது.பொதுவாக,ஒலிம்பிக் கோல்ஃப் போட்டி மொத்தம் 4 சுற்றுகளாக நடக்கும். ஒவ்வொரு சுற்றுக்கும் 18 துளைகளிலும்,மொத்தமாக 72 துளைகளிலும் பந்துகளை போட வேண்டும். இதில் ஒரு பந்தை துளையில் போடுவதற்கு குறைவான ஸ்டிரோக்களை எடுத்துக்கொள்ளும் வீராங்கனைகள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள்.
அதன்படி,நடைபெற்ற கோல்ஃப் போட்டிகளில் தொடக்கத்தில் இருந்தே முன்னிலை வகித்து வந்த அதிதி அசோக் ரவுண்டு 2 வது சுற்றின் இறுதியில் முதலிடத்தில் இருந்தார்.இதனால்,தங்க பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் இருந்தது.ஆனால்,அதன்பின்னர் நடைபெற்ற 3 வது ரவுண்டில் 68 புள்ளிகள் பெற்று, தற்போது அதிதி மூன்றாம் இடத்தில் உள்ளார்.எனினும், நான்காவது ரவுண்டு முடிவில் இவர் மீண்டும் முதல் அல்லது இரண்டாம் இடம் பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது.
Waking up early, checking up on #golf rules, following her game with every shot… #IND followed this sport like never before! ❤️
Aditi Ashok, you’re a champion! ????#Tokyo2020 | #UnitedByEmotion | #StrongerTogether | @aditigolf pic.twitter.com/E0wn5wYZOT
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) August 7, 2021
போட்டி ஒத்தி வைப்பு:
அதன்படி,இன்று கோல்ஃப் போட்டியில் 4 வது ரவுண்டு நடைபெற்ற நிலையில்,இந்தியா சார்பாக பெண்கள் பிரிவில் அதிதி அசோக் இன்று விளையாடினார்.ஆனால்,தற்போது மழைக் காரணமாக காரணமாக போட்டி ஒத்தி வைக்கப்பட்டது.
இருப்பினும்,மீண்டும் தொடங்கவுள்ள இப்போட்டியின் இறுதியில் அதிதி 65 அல்லது அதற்கு மேல் புள்ளிகள் பெற்றால்,ஏதேனும் ஒரு பதக்கத்தை வெல்ல வாய்ப்பு அதிகமாக உள்ளது.காரணம்,அவர் முதல் மூன்று இடங்களுக்குள் இருப்பதால் கண்டிப்பாக இந்தியாவுக்கு பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.