இந்திய பசுமை புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் பிறந்த தினம் இன்று…!
இந்திய பசுமை புரட்சியின் தந்தை என்றழைக்கப்படும் மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் பிறந்த தினம் வரலாற்றில் இன்று.
1925 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி கும்பகோணத்தில் பிறந்தவர் தான் எம்.எஸ்.சுவாமிநாதன். இவரது முழுப்பெயர் மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன். இவர் மருத்துவராக வேண்டும் என அவரது பெற்றோர்கள் ஆசைப்பட்டாலும், 1942 ஆம் ஆண்டு வங்கத்தில் ஏற்பட்ட பஞ்சம் காரணமாக வேளாண் துறையில் ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்துள்ளார். ஐபிஎஸ் அதிகாரியாக 1948 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், அவர் அந்த பணியில் சேராமல் சிறந்த ஆராய்ச்சியாளராக இருந்து வந்துள்ளார்.
நூற்றுக்கணக்கான ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் புத்தகங்கள் எழுதியுள்ள இவர், 1960 -களில் இந்தியாவில் உணவு பஞ்சம் ஏற்பட்டு, இந்தியர்கள் உணவு உற்பத்தி செய்ய முடியாமல் பசியால் கொத்து கொத்தாக உயிர் இழப்பார்கள் என்று பல நாடுகள் கூறி உள்ளது. இதை பொறுத்துக்கொள்ள முடியாத எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரக கோதுமையை இந்தியாவில் அறிமுகம் செய்து 20 சதவீத லாபத்தை வரவழைத்து காண்பித்துள்ளார்.
இதனையடுத்து கோதுமைப் புரட்சி என்று பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் இதை பாராட்டியுள்ளார். அதன் பின்பு இவருக்கு ராமன் மகசேசே விருது(1971), உலக உணவு பரிசு(1987), யுனெஸ்கோ மகாத்மா காந்தி விருது (2000), இந்திரா காந்தி தேசிய ஒருமைபாட்டுக்கான விருது(2013), பத்மஸ்ரீ(1967), பத்ம பூஷண்(1972), பத்ம விபூஷண்(1989) உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுதும் பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் தனது வாழ்நாளின் 92 வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.