செப்டம்பர் 1-ம் தேதிக்குள் EPFO-வுடன் ஆதார் அட்டையை இணைத்து விடுங்கள்..! எப்படி இணைப்பது தெரியுமா…?
செப்டம்பர் 1-ம் தேதிக்குள் EPFO-வுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும்.
EPFO (Employees’ Provident Funds Ordinance) சந்தாதாரர்கள், தங்கள் ஆதார் அட்டையை EPFO-வுடன் 2021 செப்டம்பர் 1-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இணைக்க தவறினால், வரும் நாட்களில் பல சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக EPFO வெளியிட்ட அறிக்கையில், செப்டம்பர் 1-ம் தேதி 2021-க்குள் முதலாளிகள் UAN (யுனிவர்சல் கணக்கு எண்) உடன் ஆதார் எண்கள் இணைக்க வேண்டும். அவ்வாறு இணைக்காவிட்டால், ஊழியர்களுக்கு மாதாந்திர PF மற்றும் அதனுடன் தொடர்புடைய கடன்களை செலுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் EPFO உடன் ஆதார் இணைப்பது எப்படி?
- epfindia.gov.in ஐப் பார்வையிட வேண்டும்.
- அதில் E-KYC போர்ட்டலில் கிளிக் செய்யவும்.
- உங்கள் ஆதார் எண்ணை உள்ளிடவும். ஒரு OTP வரும்.
- பின் உங்கள் ஆதார் எண்ணை மீண்டும் உள்ளிட்டு, OTP ஐ சரிபார்க்கவும்.
- உங்கள் ஆதார் உங்கள் PF கணக்குடன் இணைக்கப்படும்.