21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்ட ‘அஜய்’ என்ற மோப்ப நாய்…!

Default Image

21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்ட ‘அஜய்’ என்ற மோப்ப நாய்.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக, காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறையில் மோப்ப நாய் படைப்பிரிவில் அஜய் என்ற மோப்ப நாய் சேவையாற்றி வந்தது. இந்த நாய் ஜெர்மன் ஷெப்பர்ட் ரகத்தை சேர்ந்தது. இது 245 குற்ற வழக்குகளில் பணியாற்றியதில்,12 வழக்குகளில் துப்பு துலங்க உதவி செய்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் சாலவாக்கத்தில் நடந்த கொலையில் கொலையாளி வசீகரன் என்பவரை இந்த மோப்ப நாய் தான் அடையாளம் காட்டியுள்ளது. அதேபோல் இந்த மோப்பநாய் தமிழ்நாடு அளவில் பல்வேறு பணி திறன் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களையும் குவித்துள்ளது. இந்நிலையில் இந்த நாய் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளது. இதனையடுத்து  அஜயின் உடலுக்கு மாவட்ட கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் மரியாதை செலுத்தினர். பின் 21 குண்டுகள் முழங்க அஜயின் உடலை நல்லடக்கம் செய்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்