அமெரிக்காவில் விமான விபத்து – 6 பேர் உயிரிழப்பு..!

அமெரிக்காவில் சிறிய ரக விமான விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
நேற்று இரவு 7.20 மணியளவில் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் விமான விபத்து ஏற்பட்டுள்ளது. அலாஸ்கா மாகாணத்தில் உள்ள கெட்சிகன் என்ற பகுதியில் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்துள்ள விமானத்தில் இருந்து கடலோர காவல்படைக்கு ஒரு அவசர தகவல் வந்துள்ளது.
இதையடுத்து கடலோர காவல்படையினர் விமானத்தை தேடும் பணியில் இறங்கியுள்ளனர். இது குறித்து தெரிவித்த அவர்கள், அந்த சிறிய ரக விமானம் சிதறி அதிலிருந்த 6 பேரும் நீரில் மூழ்கி இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விபத்திற்கான காரணங்கள் எதுவும் வெளியாகவில்லை.
லேட்டஸ்ட் செய்திகள்
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!
April 26, 2025
திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!
April 26, 2025