தங்களின் நம்பிக்கைக்கு நன்றி ! வெல்வோம் – சசிகுமார்.!
உடன்பிறப்பே திரைப்படத்தை பார்க்க நடிகர் சிவகார்த்திகேயன் காத்திருப்பதாக ட்வீட் செய்துள்ளார்.
இயக்குனர் இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி, சூரி, கலையரசன், நிவேதிதா சதீஷ், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் உடன்பிறப்பே. இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். படத்தில் ஒளிபதிவாளராக வேல்ராஜ் பணியாற்றியுள்ளார்.
அண்ணன் தங்கை பாசத்தை உணர்த்தும் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் தங்கையாக நடிகை ஜோதிகாவும், அண்ணனாக நடிகர் சசிகுமாரும் நடித்துள்ள்ளார். இந்நிலையில், இந்த திரைப்படம் வரும், கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதாக நேரடியாக இந்த திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் அமேசான் பிரேமில் வெளியாகும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த திரைப்படத்தை பார்க்க நடிகர் சிவகார்த்திகேயன் காத்திருப்பதாக ட்வீட் செய்துள்ளார். இதில், “உடன்பிறப்பே படத்தின் இயக்குநர் இரா.சரவணன் அண்ணனின் வெற்றியை கொண்டாட காத்திருக்கும் பலரில் நானும் ஒருவன். வாழ்த்துக்கள் சூர்யா சார், சசிகுமார் சார், ஜோதிகா மேடம், சூரி அண்ணா மற்றும் உடன்பிறப்பே படக்குழுவிற்கு வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சசிகுமார் தங்களின் நம்பிக்கைக்கு நன்றி வெல்வோம்” என்று நன்றியை தெரிவித்துள்ளார்.
தங்களின் நம்பிக்கைக்கு நன்றி ! வெல்வோம் ???? https://t.co/u0lC0Ah16o
— M.Sasikumar (@SasikumarDir) August 6, 2021