‘விடா முயற்சி விஸ்வரூப வெற்றி, அதற்கு பெயரே ஸ்டாலின் தான்’ – முதல்வரின் முகக்கவசத்தை கழற்ற சொன்ன பெண்…!
ஓசூர் வழியாக காரில் சென்ற முதல்வரிடம் முக கவசத்தை கழற்ற சொன்ன பெண்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சென்றிருந்தார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஓசூர் வழியாக காரில் சென்றார்.
முதல்வர் அவர்கள் காரில் சென்ற போது, சாலையில் நின்ற ஒரு பெண், முதல்வரிடம் ‘உங்களை எப்போது பார்ப்பது. ஒரு நிமிடம் முக கவசத்தை கழற்றுங்கள். ஒருமுறை பார்ப்பதற்கு என கூறினார். உடனடியாக முதல்வர் முகக்கவசத்தை கழற்றி, அப்பெண்ணை பார்த்து சிரித்தார். பின் அப்பெண் விடா முயற்சி விஸ்வரூப வெற்றி, அதற்கு பெயரே ஸ்டாலின் தான் எனக் கூறினார்.