தளபதி விஜய்யுடன் மோத காத்திருக்கும் மூன்று வில்லன்கள்.? பீஸ்ட் அப்டேட்.!
விஜய் நடித்து வரும் பீஸ்ட் திரைப்படத்தில் மூன்று வில்லன்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிக்கப்பட்டது. அடுத்ததாக சென்னையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கப்பட்டு மாத இறுதியில் நிறைவு பெற்றது.
இதனை தொடர்ந்து மூன்றாம் கட்டப்படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கப்பட்டது. தற்போது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் பீஸ்ட் திரைப்படத்தில் மூன்று வில்லன்கள் என்றும், ஆனால் துப்பாக்கி, கத்தி படங்களின் இடம்பெற்ற கதாபாத்திரங்கள் போல் இருக்காது என்றும் கூறப்படுகிறது.
படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் படத்தை வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும், படத்திலிருந்த்து விஜய் பிறந்த நாளை முன்னிட்டு பர்ஸ்ட் லுக் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியாகியது. விரைவில் படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.