விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வலிமை அப்டேட்.! வெளியான லேட்டஸ்ட் தகவல்.!
வலிமை திரைப்படத்தின் அடுத்த அப்டேட் ரிலீஸ் தேதி அல்லது படத்தின் டீசர் குறித்த அப்டேட் வரும் செப்டம்பர் மாதம் 10-ஆம் வெளியாவதாக தகவல்.
நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஹெச்.வினோத் அடுத்ததாக நடிகர் அஜித்குமார் வைத்து வலிமை திரைப்படத்தை இயக்கி வருகிறார். படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். இந்த படத்திற்கான இறுதி கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் படமாக்கப்படவுள்ளது.
இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும், கார்த்திகேயா, புகழ், அச்சியுத் குமார், யோகி பாபு, சுமித்ரா, ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்திலிருந்து கடந்த 2-ஆம் தேதி “நாங்க வேற மாறி” என்ற பாடல் வெளியானது. இந்த பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், அடுத்ததாக வலிமை திரைப்படத்தின் அடுத்த அப்டேட் ரிலீஸ் தேதி அல்லது படத்தின் டீசர் குறித்த அப்டேட் வரும் செப்டம்பர் மாதம் 10-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றார்கள். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.