கமல்ஹாசன் அவர்களுக்கு எங்கள் நன்றியும் அன்பும் கடைசி தலைமுறை வரை இருக்கும் – கன்னிகா சினேகன்.!

Default Image

தங்களது திருமணத்தை நடத்தி வைத்த கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்து சினேகனின் மனைவி கன்னிகா தனது டுவிட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை செய்துள்ளார். 

பாடலாசிரியரும், மக்கள்நீதி மய்யம் கட்சியின் இளைஞரணி செயலாளருமான சினேகனும் நடிகை கன்னிகா ரவியும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்தனர். இதனை தொடர்ந்து இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஜூலை – 29 திருமணம் செய்துகொண்டனர். சென்னை வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் முன்னிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் கவிஞர் சிநேகனின் மனைவியும் நடிகையுமான கன்னிகா தனது டுவிட்டர் பக்கத்தில் தங்களது திருமணத்தை நடத்தி வைத்த கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.

இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் ” என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வினை தாய் மாமன் இடத்தில் இருந்து நடத்திய எங்கள் குடும்பத்தின் மூத்தவர் உலக நாயகன் நம்மவர் டாக்டர் கமல்ஹாசன் அவர்களுக்கு. எங்கள் நன்றியும் அன்பும் கடைசி தலைமுறை வரை இருக்கும் பத்திரிக்கையில் இணையானவள் என்று எழுதிய என் இணையாளனுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்