தொடங்கியது தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் வாக்குகள் எண்ணும் பணி!

Default Image

புதுச்சேரி,தமிழ்நாடு  பார் கவுன்சில் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கியுள்ளன.

மார்ச் 28 ஆம் தேதி தமிழகம் முழுவதும் 180 மையங்களில் நடைபெற்ற தேர்தலில் 25 உறுப்பினர்கள் பதவிக்கு192 பேர் போட்டியிட்டனர். தமிழகம் முழுதும் வாக்களிக்கத் தகுதி பெற்ற 53 ஆயிரத்து 640 வழக்கறிஞர்களில் 82 சதவீதம் பேர் வாக்களித்தனர். பதிவான ஓட்டுக்கள் சென்னை உயர்நீதிமன்றவளாகத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

இந்த வாக்குகளை எண்ணி முடிக்க 20 நாட்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுக்கள் எண்ணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் 25 உறுப்பினர்களில் இருந்து ஒரு தலைவர், ஒரு துணைத் தலைவர், ஒரு அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Live , Cyclone Fengal
LIVE NEWS TAMIL
gold price
Cyclone Felgam
Droupadi Murmu
US President - Israel Hezbolla war
Exams Postpond
pradeep john - tn rain