ஒலிம்பிக் மல்யுத்தம் – இந்தியாவின் வினேஷ் போகத் காலிறுதியில் தோல்வி..!
ஒலிம்பிக் மல்யுத்தம் 53 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் காலிறுதி சுற்றில் தோல்வியுற்றுள்ளார்.
இன்று நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் மல்யுத்தம் 53 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில்,இந்தியாவின் வினேஷ் போகத் ,ஸ்வீடன் வீராங்கனை சோபியாவை எதிர்கொண்டார்.ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய வினேஷ்,போட்டியின் இறுதியில் 7-1 என்ற கணக்கில் சோபியாவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
இந்நிலையில்,இதனைத் தொடர்ந்து நடைபெற்ற காலிறுதி சுற்றில் வினேஷ்,2 முறை உலக சாம்பியனான பெலாரஸின் வனேசா கலாட்ஜின்ஸ்காயாவை எதிர்கொண்டார்.ஆனால்,இப்போட்டியின் இறுதியில்,3-9 என்ற கணக்கில் வினேஷ் போகத்,வனேசாவிடம் தோல்வியுற்றுள்ளார்.இதனால்,அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.
#TeamIndia | #Tokyo2020 | #Wrestling
Women’s Freestyle 53kg 1/4 Result@Phogat_Vinesh goes down against 2 time World Champion Vanesa Kaladzinskaya and moves out of the top medal contention race! #RukengeNahi #EkIndiaTeamIndia #Cheer4India https://t.co/0u0xGLW4pn pic.twitter.com/77hWCTu1lc— Team India (@WeAreTeamIndia) August 5, 2021