ஹாக்கி ஆண்கள் : ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலம் வென்றது இந்தியா…!
ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்தியாவின் ஆண்கள் அணி ஜெர்மனியை 5-4 என கோல் கணக்கில் வீழ்த்தி வெண்கலம் வென்றுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி பிரிட்டன் காலிறுதி போட்டியில் பிரிட்டன் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் இந்திய ஆடவர் அணி வீழ்த்தியது. 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
இதனையடுத்து,ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் ஹாக்கி அரையிறுதி தொடரில் பெல்ஜியம் அணியிடம் 5:2 என்ற கோல் கணக்கில் இந்தியா தோற்றதால்,வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில்,இன்று இந்தியா ஜெர்மனியை எதிர்கொண்டது.போட்டியின் இறுதியில் 5:4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்று உள்ளது. 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி முதல் வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
HISTORY HAS BEEN REWRITTEN! THEY HAVE ENDED THE MEDAL DROUGHT!????#IND beat #GER by 5-4 to clinch the #bronze medal at #Tokyo2020……the FIRST #hockey Olympic medal after 41 years! #UnitedByEmotion | #StrongerTogether
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) August 5, 2021