பீஸ்ட் படப்பிடிப்பில் இணைந்த பிரபல மலையாள நடிகர்.!
பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக மலையாள நடிகரான ஷைன் டாம் சாக்கோ சென்னை வந்துள்ளார்.
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிக்கப்பட்டது. அடுத்ததாக சென்னையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கப்பட்டு மாத இறுதியில் முடிவடைந்து.
இதனை தொடர்ந்து மூன்றாம் கட்டப்படப்பிடிப்பு நேற்று முன்தினம் சென்னையில் தொடங்கப்பட்டது. படப்பிடிப்பில் கலந்து கொள்ள பூஜா ஹெக்டே சென்னை வந்தார். அதன்படி நேற்று முன்தினம் முதல் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தற்போது பீஸ்ட் திரைப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்புக்காக பிரபல மலையாள நடிகரான ஷைன் டாம் சாக்கோ சென்னை வந்துள்ளார். அவர் வந்த புகைப்படமும் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Mollywood Actor #ShineTomChacko just arrived Chennai to join the Set of #Beast
And he holds major portion with #ThalapathyVijay
@actorvijay #Beast pic.twitter.com/2MH44fGgth
— #BEAST (@BeastTamiIFilm) August 4, 2021