IPL 2018:வட மாநில இளைஞருக்கு சவுக்கடி கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம்!தமிழிடம் அடங்கி போன ஹிந்தி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ,டிவிட்டரில் ஹிந்தியில் பதிவிடுமாறு அறிவுறுத்திய ரசிகரிடம், எங்களுக்கு ஹிந்தி கொஞ்சம்தான் தெரியும் என பதிலளித்துள்ளது.
கடந்த சில வாரங்களுக்குமுன் தொடங்கிய 11வது ஐபிஎல் போட்டிகள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இதில், இரண்டு வருட தடைக்குப் பின் வந்துள்ள சென்னை அணிக்கு, சென்னை மட்டுமல்லாது உலகம் முழுவதும் ரசிகர்கள் கோலகல வரவேற்பளித்து வருகின்றனர்.
ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக, சென்னை அணி வீரர்களும் தங்கள் முழு திறமையை வெளிப்படுத்தி, அணியின் வெற்றிக்கு பாடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், டிவிட்டரில் சென்னை அணி ரசிகர் ஒருவர், சென்னை அணிக்கு நாடு முழுவதும் ரசிகர்கள் உள்ளதாகவும், எல்லோருக்கும் தமிழ் தெரியாது என்பதால், ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் பதிவிடுமாறு கோரிக்கை வைத்தார்.
அதற்கு பதிலளித்த சென்னை அணி,ஆங்கிலம் என்றால் ஓகே,எங்களுக்கு தோடா தோடா(கொஞ்சம் கொஞ்சம் )ஹிந்தி தான் தெரியும். அட்ஜெஸ்ட் செய்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர். இதையடுத்து,சிலர் ஹிந்தியில் பதிவிடுமாறும்,சிலர் தமிழ் ஆங்கிலத்தில் பதிவிட்டாலே போதுமானது எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.