வாட்ஸ்அப் அறிமுகப்படுத்திய புதிய அம்சம் – அதை எப்படி இயக்குவது..!

Default Image

வாட்ஸ்-அப் நிறுவனம் அதன் செயலியில் ‘வியூ ஒன்ஸ்’ என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

வாட்ஸ்-அப் நிறுவனம் இறுதியாக ‘வியூ ஒன்ஸ்’ (View Once) புகைப்பட அம்சத்தை பயன்பாட்டின் நிலையான பதிப்பில் சேர்த்துள்ளது.இந்த அம்சம்  இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்நாப்சாட் போன்றவைகளில் உள்ள மீடியா (expiring media )அம்சம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் போன்றது. அதாவது,இந்த ‘வியூ ஒன்ஸ்’ அம்சத்தைப் பயன்படுத்தி பகிரப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஒருமுறை பார்க்கப்பட்ட பின்னர் தானாக மறைந்துவிடும். ஆனால், ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒரு முறை புகைப்படம் அல்லது வீடியோவை அனுப்ப விரும்பும் போது ‘வியூ ஒன்ஸ்’ அம்சத்தை  நீங்கள் கிளிக் செய்ய வேண்டும்.

புதிய வாட்ஸ்-அப் அம்சத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

‘வியூ ஒன்ஸ்’ (ஒருமுறை பார்க்கவும்) அம்சத்தைப் பயன்படுத்தி நீங்கள் அனுப்பும் எந்தவொரு புகைப்படம் அல்லது வீடியோவும் பெறுநரின் புகைப்படங்கள் அல்லது கேலரியில் சேமிக்கப்படாது என்பதை வாட்ஸ்-அப் உறுதிப்படுத்தியுள்ளது. ஒரு முறை நீங்கள் அனுப்பும் ஒரு புகைப்படம் அல்லது வீடியோவைப் பெறும் பயனர் அதை மீண்டும் பார்க்க முடியாது.

மேலும்,’வியூ ஒன்ஸ்’ அம்சத்துடன் அனுப்பப்பட்ட அல்லது பெறப்பட்ட புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை,சேமிக்கவோ,ஸ்டார் அல்லது வேறு யாருக்கும் அனுப்பவோ வாட்ஸ்-அப் உங்களை அனுமதிக்காது. மாறாக,புகைப்படம் அல்லது வீடியோவை அனுப்புபவர் ‘வியூ ஒன்ஸ்’ அம்சத்தை நீக்கினால் மட்டுமே பெறுநர் அதனை மீண்டும் பார்க்க முடியும்.

குறிப்பாக, புகைப்படம் அல்லது வீடியோவை அனுப்பிய 14 நாட்களுக்குள் திறக்கவில்லை என்றால்,அவை சாட் லிஸ்டில் இருந்து மறைந்து விடும் என்று நிறுவனம் என்று கூறுகிறது.

இருப்பினும்,’வியூ ஒன்ஸ்’ அம்சத்துடன் அனுப்பும் மீடியாவினை ஸ்கிரீன் ஷாட் அல்லது ஸ்கிரீன் ரெக்கார்டிங் எடுக்க முடியும் என்று வாட்ஸ்-அப் எச்சரிக்கிறது.மேலும்,பேக் அப் செய்யும் போது ‘வியூ ஒன்ஸ்’  மூலம் அனுப்பப்பட்ட மீடியா திறக்கப்படாமல் இருந்தால் ரீ-ஸ்டோர் செய்ய முடியும் என்று வாட்ஸ்அப் தெரிவிக்கிறது.ஆனால்,புகைப்படம் அல்லது வீடியோ ஏற்கனவே திறந்திருந்தால், மீடியாவை பேக் அப் மற்றும்  ரீ-ஸ்டோர் செய்ய முடியாது.இத்தகைய வியூ ஒன்ஸ் அம்சத்திற்காக நிறுவனம் கடந்த செப்டம்பர் 2020 முதல் பணியாற்றி வருகிறது.

இது கடந்த ஜூன் மாத இறுதியில் ஆண்ட்ராய்டு,ஆப்பிள் iOS சாதனங்களுக்கான பீட்டாவெர்ஷனில் சோதனை முறையில் உள்ளது.மேலும்,இந்த அம்சம்,விரைவில் அனைத்து பதிப்பிற்கும் வரவுள்ளது.அவ்வாறு,வந்த பின் எவ்வாறு பயன்படுத்துவது என்று கீழே காண்போம்.

வாட்ஸ்அப்பில்  ‘வியூ ஒன்ஸ்’ அம்சத்துடன் மீடியாவினை எப்படி அனுப்புவது?

1: வாட்ஸ்-அப்பைத் திறந்து இணைப்பு (attachment) ஐகானை கிளிக் செய்யவும்.

2: பிறகு, கேலரிக்குச் சென்று, உங்கள் தொடர்புக்கு (your contact) நீங்கள் அனுப்ப விரும்பும் புகைப்படம் அல்லது வீடியோவைத் தேர்ந்தெடுக்கவும்.

3: அதைத் தேர்ந்தெடுத்த பிறகு, ‘தலைப்பைச் சேர்’ (Add a caption) பட்டியில் கடிகாரம் போன்ற ஐகானைக் காண்பீர்கள், ‘வியூ ஒன்ஸ்’ அம்சத்தை இயக்க அதை க்ளிக் செய்யவும். நீங்கள் அதை இயக்கியவுடன், “புகைப்படம் ஒரு முறை பார்க்க அமைக்கப்பட்டது” என்று ஒரு செய்தியை பயன்பாடு காண்பிக்கும். அதன்பின்னர்,புகைப்படங்களை நீங்கள் அனுப்பலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்